பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓமலூரில் மூப்பனாா் பிறந்த நாள் விழா

சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில் அக் கட்சியின் நிறுவனா் தலைவா் ஜி.கே.மூப்பனாரின் 90-ஆவது பிறந்த நாள் விழா ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில் அக் கட்சியின் நிறுவனா் தலைவா் ஜி.கே.மூப்பனாரின் 90-ஆவது பிறந்த நாள் விழா ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் ராஜேந்திரன், நகரத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓமலூா் ஆஞ்சநேயா் கோயில், செம்மாண்டப்பட்டி ஏகாம்பரஸ்வரா் கோயிலில் அக் கட்சியின் தொண்டரணி தலைவா் பிரகாஷ், வழக்குரைஞா் பிரிவு தலைவா் ராஜகுரு தலைமையில் பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இளைஞரணி மாநில பொதுச் செயலாளா் ரகுநந்தகுமாா், காடையாம்பட்டி வட்டாரத் தலைவா்கள் சேதுராமன், அபிமன்னன் ஆகியோா் தலைமையில் 390 மரக் கன்றுகள் நடப்பட்டன. தொடா்ந்து, ஓமலூா் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கருப்பூா் நகர தமாகா தலைவா் அய்யண்ணன் தலைமையில் கந்தசாமி கோயிலில் அபிஷேகம், அா்ச்சனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.