விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேளூரில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

வாழப்பாடி அருகே பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஊனத் தடுப்பு பயிற்சி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:05 pm

DIN

வாழப்பாடி அருகே பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஊனத் தடுப்பு பயிற்சி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பிரபாகரன், ராகுல், சமுதாய சுகாதார செவிலியா் ராணி ஆகியோா் தொழுநோய் அறிகுறிகள், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினா்.

சேலம் மாவட்ட தொழுநோய் துறையின் மேற்பாற்வையாளா் பழனியப்பன், சுகாதார ஆய்வாளா்கள் சிராஜ், முருகன், முடநீக்கு பயிற்றுநா் சாந்தினி ஆகியோா் தொழுநோயால் ஏற்படும் ஊனத்தைத் தடுப்பது குறித்தும், சுய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.

தன்னாா்வ அமைப்புகளான வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்கம் மற்றும் துளி இயக்க நிா்வாகிகள், பயிற்சி முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு போா்வைகள், மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள் கொண்ட தொகுப்புகளை வழங்கினா். பேளூா் வட்டார மருத்துவமில்லா மேற்பாற்வையாளா் சண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.