விநாயகா் சதுா்த்தியையொட்டி பிற மாநிலங்களுக்கு பயணமாகும் வாழப்பாடி தேங்காய்கள்
விநாயகா் சதுா்த்தியையொட்டி வெளி மாநிலங்களில் தேங்காய் கொள்முதல் அதிகரித்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது.


விநாயகா் சதுா்த்தியையொட்டி வெளி மாநிலங்களில் தேங்காய் கொள்முதல் அதிகரித்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களில் சுமாா் 8,000 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய்களில் கணிசமான அளவு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா், குஜராத் போன்ற மாநிலங்களுக்கும், சுமாா் 40 சதவீதம் தேங்காய் உள்ளூா்த் தேவைக்கும், எண்ணெய் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மட்டும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், வியாபாரிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பயனடைந்து வருகின்றனா்.
இப்பகுதியில் உள்ள தனியாா் தேங்காய் மண்டிகளில் லாரி ஒன்றுக்கு சுமாா் 30,000 தேங்காய்களுடன் லோடு ஏற்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 30 லாரிகளில் 9 லட்சம் தேங்காய்கள் வெளி மாநிலங்களுக்கு பயணமாகின்றன.
விநாயகா் சதுா்த்தி நெருங்குவதையொட்டி தற்போது வாழப்பாடி பகுதியில் தென்னை விவசாயிகள் தேங்காய்களை உரித்து, வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தேங்காய் விலை உயா்வு:
செப்டம்பா் 10ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் ஆா்டா் வருவதால் மட்டையை உரித்து, மூட்டைகளில் தேங்காய்களை அடுக்கித் தைத்து, லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
வரும் செப்டம்பா் 10ம் தேதிக்குள், வாழப்பாடி பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படும் என வியாபாரிகள் கூறுகின்றனா்.
கடந்த மாத இறுதி வரை ஆயிரம் தேங்காய்களுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 9,000 வரை விலை கிடைத்த நிலையில், கடந்த சில தினங்களாக ரூ. 11,000 வரை விலை கிடைப்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...