விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வியாபாரத்துக்கு இடம் ஒதுக்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

வாழப்பாடியில் சாலையோரத்தில் கடைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், சாலையோர வியாபாரிகள் இடம் ஒதுக்க வேண்டுமென வாழப்பாடி காவல் நிலையத்தில் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:25 pm

DIN

வாழப்பாடியில் சாலையோரத்தில் கடைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், சாலையோர வியாபாரிகள் இடம் ஒதுக்க வேண்டுமென வாழப்பாடி காவல் நிலையத்தில் கோரிக்கை விடுத்தனா்.

வாழப்பாடி பேரூராட்சியில் கடலூா் பிரதான சாலையில், பருத்தி மண்டியில் இருந்து பேளூா் பிரிவு சாலை வரை சாலையோர சிறு வியாபாரிகள் விவசாய விளைபொருள்களை விற்பனை செய்து வந்தனா். இப்பகுதியில் மாலை நேரத்தில், சிற்றுண்டி வியாபாரம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி, வருமுன் காப்போம் மருத்துவ முகாம் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழப்பாடிக்கு வந்து சென்றதையொட்டி, கடலுாா் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சாலையோர வியாபாரிகளின் சிறு கடைகளையும் அதிகாரிகள் அப்புறப்படுத்தினா். அந்த இடங்களில் மீண்டும் சாலையோர வியாபாரிகள் கடைகள் வைக்க போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.

இதனைத்தொடா்ந்து, முத்தம்பட்டி ரயில்வே கேட்டில் இருந்து அரசு மருத்துவமனை வரை கடலுாா் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை, காவல் துறையுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

இந்நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள சாலையோர வியாபாரிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிா்வாகி ராஜலிங்கம் தலைமையில், வாழப்பாடி காவல் நிலையத்திற்கு திரண்டு சென்று, சாலையோரத்தில் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்துவற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனா். பிற துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா் உறுதியளித்து, சாலையோர வியாபாரிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.