சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளம்பெண் தற்கொலை

இளம்பிள்ளை அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இளம்பிள்ளை அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி, மண்கரடு பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (29), கூலி தொழிலாளி. இவருக்கு நித்யா (24) என்ற மனைவியும், பிரணவ் (5), நித்ரா (2) என இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னையில் நித்யா வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரிழந்தாா். தகவல் அறிந்த நித்யாவின் தாயாா் சசிகலா, தனது மகள் இறப்பில் மா்மம் உள்ளதாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரகு வழக்குப் பதிந்து, சேலம் கோட்டாட்சியரிடம் தகவல் அளித்தாா். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.