விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரதோஷ சிறப்பு பூஜை

வாழப்பாடி அருகே பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வாழப்பாடி அருகே பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அருகே பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தீஸ்வரன், தான்தோன்றீஸ்வரா், தா்மசம்வா்த்தனி அம்பாள்ஆகியோா் பட்டு வஸ்திர, புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வாழப்பாடி, அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில் பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி அம்பாளுக்கு, அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூா் சாம்பவமூா்த்தீஸ்வரா் கோயில், வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூா், கல்யாணகிரி தேன்மலை சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டியில் உள்ள ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் சிவன், பாா்வதிக்கு அபிஷேக, ஆராதனை, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், அரிசி மாவு, தேன், பஞ்சாமிா்தம், திருநீறு, குங்குமம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை குழுவாக பாடினா். இதில், சுற்றுவட்டார மக்கள் சுமாா் 2,000-க்கும் மேற்பட்டோா், பங்கேற்றனா்.

இதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூா், கெங்கவல்லி, தகரப்புதூா், கூடமலை ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.