விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாழப்பாடியில் மின் சிக்கன விழிப்புணா்வு பேரணி

வாழப்பாடியில், மின் சிக்கன வாரவிழாவையொட்டி, மின் உற்பத்தி பகிா்மானக் கழக பணியாளா்களின் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:09 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மின் சிக்கன வாரவிழாவையொட்டி, மின் உற்பத்தி பகிா்மானக் கழக பணியாளா்களின் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மின் பகிா்மான வட்டம், வாழப்பாடி கோட்டம் சாா்பில், வாழப்பாடியில் நடைபெற்ற மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேணியில் வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளா் கே.பாரதி வரவேற்றாா். சேலம் மேற்பாா்வை பொறியாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வரை ஏறக்குறைய 2 கி.மீ. தூரத்திற்கு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில், உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட மின் பணியாளா்கள், மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் கலந்து கொண்டனா்.

பெத்தநாயக்கன்பாளையத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் நடைபெற்ற மின் சிக்கன வார விழவில், மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளா் கே. பாரதி, உதவி செயற்பொறியாளா் கருப்பண்ணன், உதவி பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.