விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சங்ககிரியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 12-ஆம் தேதி) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:24 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 12-ஆம் தேதி) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோட்டூா், மேட்டாங்காடு, பொன்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் பிரவீண் தலைமையிலான மருத்துவக்குழுவினா், புள்ளிப்பாளையம், தாசநாயக்கன்பாளையம், அன்செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக்குழுவினா், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட கோரிகாடு, மேக்காடு, சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வாா்கள்.

இதே போல ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவக்குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வாா்கள் என மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.