விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சங்ககிரி ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் மற்றும் பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை  நடைபெற்றது. 

News image
Updated On :22 ஜூன் 2021, 1:07 pm

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் மற்றும் சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை  நடைபெற்றது. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில்  உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

Story image

இதே போல் சங்ககிரி அருகே உள்ளஅன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் செல்லவில்லை. ஆகமவிதிகளின் படி இரு கோயில்களின் அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகளை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.