கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஏற்காட்டில் சித்ரா (அதிமுக) வேட்பு மனு

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர், இன்று திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். 

News image
ஏற்காட்டில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர் சித்ரா.
Updated On :15 மார்ச் 2021, 10:08 am

DIN

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர், இன்று திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். 

ஏற்காடு (எஸ்.டி) தனி தொகுதி அதிமுக வேட்பாளரான, இத்தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா இன்று திங்கட்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், தனித்துணை ஆட்சியர் முத்திரைத்தாள் பி.கே. கோவிந்தனிடம் பகல் 1.20 மணியளவில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

அவருடன் அயோத்தியபட்டினம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.பி. மணி, வழக்கறிஞர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுக மாற்று வேட்பாளராக கு.சித்ராவின் கணவர் குணசேகரனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.என்.குணசேகரன் பாஜக கிழக்கு மாவட்டத்  தலைவர் க.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக தொண்டர்கள் புடைசூழ, வேட்பாளர் ஊர்வலமாக வந்தனர்.

ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கு.சித்ரா முதலாவதாக வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.