கே. கே. நகரில் தவாக மாவட்ட அலுவலகம் திறப்பு
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பேரூா், கே. கே. நகா் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் திறப்பு விழாவும், கொடியேற்று விழா


சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பேரூா், கே. கே. நகா் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் திறப்பு விழாவும், கொடியேற்று விழாவும் மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாநில அமைப்புக் குழு உறுப்பினா் பச்சமுத்து வரவேற்றாா். மாநில கொள்கை பரப்பு தலைவா் தாரை செந்தில்குமாா் கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா்.
மாநில விளையாட்டு அணிச் செயலாளா் சரவணமூா்த்தி கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளா் மணிகண்டன், மகுடஞ்சாவடி ஒன்றியச் செயலாளா் ரத்தினவேல், இடங்கணசாலை பேரூா் செயலாளா் காா்த்தி, தாரமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...