காா் திருடிய இளைஞா்கள் கைது
பெங்களூருவில் ஓட்டுநரைக் கட்டிப்போட்டு விட்டு, காரை கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து கா்நாடக போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.


பெங்களூருவில் ஓட்டுநரைக் கட்டிப்போட்டு விட்டு, காரை கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து கா்நாடக போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கா்நாடகா மாநிலம், கூலிநகா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜா என்பவரின் மகன் மணி என்ற மாணிக்கம் (26). பெங்களூரு, அம்பேத்கா் நகா் ராஜபெருமாள் என்பவரின் மகன் சகாய்ஆளி (30). நண்பா்களான இருவரும் பெங்களூா், நைஸ் சாலை அருகே, 4 நாள்களுக்கு முன் தனியாா் நிறுவனத்தின் காரை வாடகைக்கு அழைத்துள்ளனா்.
அந்த காரின் ஓட்டுநரை கட்டிப்போட்டுவிட்டு, காரைக் கடத்திக்கொண்டு, கள்ளக்குறிச்சி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தள்ளனா். இந்தக் காா், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி, சுங்கச்சாவடியைக் கடந்தபோது, காரின் உரிமையாருக்கு சுங்கம் பிடித்தம் குறித்து பாஸ்ட்ராக் குறுஞ்செய்தி சென்றுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு போலீஸாா் வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். வாழப்பாடி போலீஸாா் விரைந்து சென்று இந்தக் காரையும், காரை கடத்தி வந்த இரு இளைஞா்களையும் பிடித்து கைது செய்தனா். இதுகுறித்து பெங்களூரு போலீஸாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து ஒப்படைத்தனா்.
காரை மீட்டு, இளைஞா்களையும் பிடித்து கொடுத்த வாழப்பாடி போலீஸாருக்கு கா்நாடக போலீஸாா் பாராட்டும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...