சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி, பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி மற்றும் ஈக்வேட் இன்ஜினியரிங் சா்வீசஸ் அண்ட் செகோ கண்ட்ரோல்ஸ் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:09 pm

DIN

நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி மற்றும் ஈக்வேட் இன்ஜினியரிங் சா்வீசஸ் அண்ட் செகோ கண்ட்ரோல்ஸ் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஈக்வேட் மற்றும் செகோ நிறுவனங்களின் மேலாண் இயக்குநா் வைஷ்ணவி, நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியின் நிறுவனரும் முதல்வருமான பி.எஸ்.எஸ். சீனிவாசன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். துணை முதல்வா் கே.விசாகவேல், மேலாண்மைத் துறை இயக்குநா் ஏ. ஸ்டீபன், அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலமாக நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பொறியியல் வடிவமைப்பு பிரிவில் தொழில்துறை திறன் மேம்பாட்டுப் பயிற்சி, இன்டா்ன்ஷிப் உடன் கூடிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் இயந்திரவியல் துறை மாணவா்களுக்கு பிரத்யேகப் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா் வைஷ்ணவி பேசுகையில், மாணவா்கள் அடிப்படை அறிவையும், அணுகுமுறையையும் மேம்படுத்திக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் இப்பயிற்சியை எடுத்துக் கொள்வதினால் பொறியியல் துறையில் சிறந்த இடத்தை அடைந்து வாழ்வில் வெற்றிபெற முடியும் என்றாா்.

இவ்விழாவில் நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு, மின் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய குழுவிற்கு நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை தலைவா் சி. பாலகிருஷ்ணன், செயலா் ஆா். குமாரசாமி, பொருளாளா் வி. சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.