எடப்பாடி அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

எடப்பாடி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட சித்தூர் கிராமம் அருகே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்வழி பாதை யில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
எடப்பாடி அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எடப்பாடி அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on
Updated on
1 min read

எடப்பாடி: எடப்பாடி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட சித்தூர் கிராமம் அருகே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

எடப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட சித்தூர் ஊராட்சி, புளியம்பட்டி கிராம பகுதியில் பழமையான நீரோடை ஒன்று அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இப்பகுதி விவசாய நிலங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வந்த இந்த நீரோடை ஆனது, பல்வேறு காலகட்டங்களில், தனியார் ஆக்கிரமிப்பாலும், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை தடைகளும் தற்போது நீர்வழிப் பாதையில் நீரே துமின்றி பயனற்ற நிலை உருவானது.

நீர்வழிப்பாதையினை மீண்டும் புனரமைத்து இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பெருக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி துறையினர் மற்றும் வருவாய் துறையினர், வியாழன் அன்று சித்தூர் புளியம்பட்டி முதல் சென்னி மலையனூர் வரையிலான சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன், எடப்பாடி வட்டாட்சியர் விமல் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் வனஜா, கிராம நிர்வாக அலுவலர் அப்புசாமி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள இச்சூழலில், புளியம்பட்டி பகுதியில் உள்ள பெரிய நீர்வழிப் பாதை சீரமைக்கப்பட்டது. இப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com