விதிமீறல் கண்டறிந்தால் பட்டாசு கடைகளுக்கு ‘சீல்’
விதிமீறல் கண்டறிந்தால் பட்டாசு கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் எச்சரிக்கை விடுத்தாா்.


விதிமீறல் கண்டறிந்தால் பட்டாசு கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் எச்சரிக்கை விடுத்தாா்.
கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பட்டாசு விற்பனையைப் பொருத்தவரை மாவட்டம் முழுவதும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் கடைகளுக்கான உரிமங்களை வழங்கி வருகிறாா். மேலும் கோட்டாட்சியா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமீறல்கள் குறித்து பட்டாசு கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விதிமீறல் கண்டறிந்தால் பட்டாசு கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆலின் சுனேஜா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஜெயந்தி, உதவி ஆணையா் (கலால்) எஸ்.தனலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...