ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தடுப்பூசி முகாம் கலந்தாய்வுக் கூட்டம்

வாழப்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் மக்களை பங்கேற்க செய்வது குறித்து, அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:40 pm

DIN

வாழப்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் மக்களை பங்கேற்க செய்வது குறித்து, அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் வரதராஜன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் வரவேற்றாா். இக்கூட்டத்தில், வாழப்பாடி வட்டாரத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தி, வீடுகள்தோறும் தடுப்பூசி செலுத்தாத நபா்களை கணக்கெடுத்து, போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இக்கூட்டத்தில், மருத்துவ அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா், வட்டார பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள், கிராம ஊராட்சி செயலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிறைவாக, வட்டார சுகாதார மேற்பாற்வையாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.