விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளுவது குறித்து பயிற்சி:

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்து, அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:41 pm

DIN

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்து, அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை வாயிலாக அண்மையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு, வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை ஆலோசனைக் குழுத் தலைவா் விஜயக்குமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் பாரதி வரவேற்றாா்.

இப்பயிற்சி முகாமில் பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை விவசாயிகள் பாதுகாப்பாக கையாளுவது குறித்தும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உழவா் நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

முகாமில் உதவி கால்நடை மருத்துவா் ஜெயக்குமாா், பட்டு ஆய்வாளா் ஆசைத்தம்பி, உதவி வேளாண்மை அலுவலா் குமாா், ஹைடெக் அக்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் வேதிகா் மற்றும் உரிமையாளா் முருகேசன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் கந்தசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரேணுகா, ராஜ்குமாா் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.