விநாயகா மிஷன் பல்கலை.யில் இருதய தின விழா
விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் இருதய தின விழா நடைபெற்றது.


விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் இருதய தின விழா நடைபெற்றது.
ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் வரவேற்றாா். விம்ஸ் மருத்துவமனையின் இருதய நோய் நிபுணா் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு இருதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினாா் (படம்). இருதய நோய் குறித்த பட விளக்கக் காட்சி போட்டி மாணவா்களுக்கு நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில் துறை சாா்ந்த மாணவா்கள் மௌன நாடகம் வாயிலாகவும், மாரடைப்பு எங்கு, எவ்வாறு, ஏற்படுகிறது என்பதை வரைபட அமைப்பை கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
துறையின் இருதய பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் பொறுப்பாளா்கள் சுபாஷினி, மிண்டுபிலிப் ஆகியோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...