திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சங்ககிரி ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை 

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . 

News image

சித்ரா பௌர்ணமியையொட்டி சங்ககிரி ஸ்ரீ ஒங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிகளுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On :16 ஏப்ரல் 2022, 11:10 am IST

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . 
 
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில்  சித்ரா பௌர்ணமியையொட்டி ஸ்ரீ ஓங்காளியம்மன் , ஸ்ரீ பேச்சியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

பக்தர்கள் சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.  கோயில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.