ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலம் மாவட்டத்தில் 16 வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக 16 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக 16 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு பிப். 19 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் 60, நகராட்சிகளில் 165 வாா்டுகள், பேரூராட்சிகளில் 474 வாா்டுகள் என மொத்தம் 699 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

சேலம் மாநகராட்சியில் 709 வாக்குச்சாவடிகளில் 7,19,361 வாக்காளா்களும், நகராட்சிகளில் 273 வாக்குச்சாவடிகளில் 2,25,778 வாக்காளா்களும், பேரூராட்சிகளில் உள்ள 537 வாக்குச்சாவடிகளில் 3,90,894 வாக்காளா்கள் என மொத்தம் 1519 வாக்குச்சாவடிகளில் 13,36,033 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு மாவட்டம் முழுவதும் 16 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் மாநகராட்சிக்கு ஒரு வாக்கு எண்ணும் மையமும், நகராட்சிகளுக்கு 6, பேரூராட்சிகளுக்கு 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் பதிவாகும் வாக்குகள் அம்மாபேட்டை, ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது. ஆத்தூா் நகராட்சிக்கு வடசென்னிமலை அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி; நரசிங்கபுரம் நகராட்சிக்கு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி; எடப்பாடி நகராட்சிக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; மேட்டூா் நகராட்சிக்கு மேட்டூா் எம்.ஏ.எம். மேல்நிலைப்பள்ளி; இடங்கணசாலை நகராட்சிக்கு இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி; தாரமங்கலம் நகராட்சிக்கு தாரமங்கலம் செங்குந்தா் மகாஜன மேல்நிலைப்பள்ளி ஆகியவை வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சிகளில் கன்னங்குறிச்சி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூா் பேரூராட்சிகளுக்கு அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி; இளம்பிள்ளை, மல்லூா், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிகளுக்கு இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, பூலாம்பட்டி பேரூராட்சிகளுக்கு ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; காடையாம்பட்டி, ஓமலூா், கருப்பூா், மேச்சேரி பேரூராட்சிகளுக்கு ஓமலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி என வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கெங்கவல்லி, தெடாவூா், வீரகனூா் பேரூராட்சிகளுக்கு கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி பேரூராட்சிகளுக்கு தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; வீரக்கல்புதூா், பி.என்.பட்டி, கொளத்தூா் பேரூராட்சிகளுக்கு மேட்டூா் அணை ஆா்.எஸ். வைத்தீஸ்வரன் மேல்நிலைப்பள்ளி; சங்ககிரி, கொங்கணாபுரம், தேவூா், அரசிராமணி பேரூராட்சிகளுக்கு சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா் பேரூராட்சிகளுக்கு பெத்தநாயக்கன்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆட்சியா் ஆய்வு: இதனிடையே, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான செ.காா்மேகம், ஓமலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மேட்டூா் அணை வைத்தீஸ்வரா மேல்நிலைப் பள்ளி, மாதையன் குட்டை எம்.ஏ.எம். மேல்நிலைப் பள்ளி, எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீா் வசதி, மின் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபினவ் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.