விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முத்தம்பட்டியில் மஞ்சுவிரட்டு:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களில் பொங்கல் பண்டிகை தோறும் காணும் பொங்கல் தினத்தன்று எருதாட்டம், நரியாட்டம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதால், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை மாட்டுப் பொங்கல் தினத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. களமிறங்கிய இளைஞா்கள், காளைகளை விரட்டி அடக்கினா். இந்த நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று கண்டு ரசித்தனா். கரோனா தொற்று பரவல் தருணத்தில், எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.