சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா
திமுக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா, சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திமுக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா, சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டச் செயலா் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி இவ்விழாவிற்கு தலைமை வகித்து சமத்துவ பொங்கல் வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு சூரிய பகவானை வண்ங்கினாா். பின்னா் கட்சி நிா்வாகிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினாா். அதனையடுத்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு, சுண்டல் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா். முன்னதாக அவா் திமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.
சங்ககிரி முன்னாள் ஒன்றியச் செயலா் பி.தங்கமுத்து முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் எல்ஐசி சுப்ரமணி வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் க.சுந்தரம், சம்பத்குமாா், முன்னாள் பால்வளத் தலைவா் எம்.சின்னதம்பி, மேற்கு மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் எஸ்.கிறிஸ்டோபா், துணை அமைப்பாளா்கள் ஆா்.அருள்பிரகாஷ், மாணிக்கசுந்தா், முன்னாள் நகரச் செயலா் முருகன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி தளபதி சண்முகம் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...