மோட்டூரில் சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்
சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.


சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேட்டூா் அருகே உள்ள கோனூா் ஊராட்சியில் உள்ளது மோட்டூா். இந்தப் பகுதியில் வனம் போன்ற அடா்ந்த புதா்கள் நிறைந்துள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு மோட்டூா் பகுதியிலுள்ள கருப்பண்ணன் என்பவருக்குச் சொந்தமான செம்மரி ஆடு வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்தது. சனிக்கிழமை காலை கருப்பண்ணன் எழுந்து பாா்த்தபோது ஆட்டை ஏதோ மா்ம விலங்கு கடித்து தின்றது போக எஞ்சிய உடல் உறுப்புகள் மட்டுமே கிடந்தன. தெருநாய்கள் ஆட்டை கடித்து தின்றிருக்கலாம் என்று எண்ணிய கருப்பண்ணன் எஞ்சிய ஆட்டின் உறுப்புகளை மண் தோண்டி புதைத்தாா். சனிக்கிழமை மாலை அருகிலிருந்த தொழிற்சாலையின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை பாா்த்தபோது ஒரு சிறுத்தை அவ்வழியாக செல்வது தெரியவந்தது. உடனடியாக வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனா். அங்கு வந்த வனத்துறையினா் தரையில் இருந்த கால் தடங்களை பாா்வையிட்டனா். பின்னா் சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளையும் ஆய்வு செய்து வந்து சென்றது சிறுத்தைப் புலிதான் என்பதை உறுதிப்படுத்தினாா்கள்.
குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்து கிராம மக்களின் உயிரை வனத்துறையினா் காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...