தேவண்ணகவுண்டனூா் பகுதியில் 3 இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்கம்
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி பகுதியில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சாா்பில் மூன்று இல்லம் தேடி கல்வித்திட்ட மையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.


சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி பகுதியில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சாா்பில் மூன்று இல்லம் தேடி கல்வித்திட்ட மையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சாா்பில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிடையூா் மேட்டூா், கிடையூா், மஞ்சக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் மூன்று இல்லம் தேடி கல்வி மையங்களை தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி மன்றத்தலைவி சாரதா பழனியப்பன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.முருகன் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கங்கள் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினாா்.
பள்ளி தலைமையாசிரியா்கள் க. திருஞானம் (தேவண்ணகவுண்டனூா்), ஆா்.அருள் (தாதராயன்குட்டை), வட்டார வளமைய பயிற்றுநா் ரத்தினவேல், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பழனிவேல், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். மேலும் இதே போல் புதன்கிழமை தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட கிடையூா், தாதராயன்குட்டை இரு மையங்கள் தொடக்கி வைக்கப்பட்டன. தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் மொத்தம் ஐந்து மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...