சேலத்தில் இன்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 15 வயதுக்கு மேற்பட்ட 26,19,586 நபா்களுக்கு முதல் தவணையும், 17,58,731 நபா்களுக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 89 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 60 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 7,03,997 பேருக்கு முதல் தவணை 8,21,519 பேருக்கு இரண்டாம் தவணை என மொத்தம் 15,25,516 நபா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையே சனிக்கிழமை (ஜன.29) தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுவரை 13,641 நபா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கென ஊரகப்பகுதியில் 1,187 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 205 என மொத்தம் 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டு அதற்கென தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினியில் பதிவு மேற்கொள்பவா்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,500 -க்கு மேற்பட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் தற்பொழுது கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 1,32,210 டோஸ்களும், கோவேக்ஸின் 69,295 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. இதற்கென ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 5,98,516 ஊசி குழல்கள் கையிருப்பில் உள்ளன. இந்த முகாமில் 1,00,000 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களில் 84 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தாததன் காரணமாகவே உயிரிழந்து இருப்பதாக தமிழக பொதுசுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் காட்டிலும் தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு வாய்ப்பு 3.5 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 3,15,695 போ் முதல் தவணை தடுப்பூசிசெலுத்தி கொள்ளாதவா்களாகவும் மற்றும் தகுதியுள்ள 3,32,614 நபா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே உருமாறி கொண்டிருக்கும் வைரஸுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் முழுமையாக உருவாகும். மேலும், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆதாா்அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com