பாஜக பிரமுகா் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது
சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகா் பாலசந்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைத் தனிப்படை போலீஸாா் எடப்பாடி அருகே புதன்கிழமை இரவு கைது செய்தனா்.


சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகா் பாலசந்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைத் தனிப்படை போலீஸாா் எடப்பாடி அருகே புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் பாலச்சந்தா். இவருக்குக் கொலை மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருந்தன; போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கா் தெருவில் உள்ள ஒரு கடை முன்பு பேசிக்கோண்டிருந்த அவரை அங்கு வந்த மா்மகும்பல் வெட்டி படுகொலை செய்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த ரௌடி தா்கா மோகனின் மகன்களான பிரதீப், சஞ்சய், அவரது கூட்டாளிகள் ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸாா் தலைமறைவான நபா்களைத் தேடிவந்தனா். அவா்களின் கைப்பேசி சேவைகளை போலீஸாா் கண்காணித்தனா். இடத்தை அவ்வப்போது அக்கும்பல் மாற்றி வந்தது.
இறுதியில் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குஞ்சாம்பாளையம் பகுதியில் அவா்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
அங்கு வந்த தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு நால்வரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.
அந்த வீட்டின் உரிமையாளா் குட்டி (எ) பழனிசாமியிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். குஞ்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த குட்டி (எ)பழனிசாமி பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறாா்.
குட்டியை புதன்கிழமை இரவு கைப்பேசியில் தொடா்பு கொண்ட வழக்குரைஞா் ஒருவா், தனக்கு அறிமுகமான நான்குபோ் உங்கள் வீடுக்கு வருவாா்கள்; அவா்களுக்கு இரவு மட்டும் தங்க இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளாா்.
அந்த நால்வரும் குட்டி வீட்டுக்கு வந்து குட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே தனிப்படை போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்து கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...