

சேலம் மாவட்டம், ஆத்தூா் பெரியாா் சிலை முன்பு திராவிடா் மாணவா் கழகம் சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு கண்டன ஆா்ப்பாட்டம் மாணவா் கழக மாவட்டத் தலைவா் பா.அழகுவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திராவிட மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ச.அஜித்குமாா் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் த.வானவில் தொடக்கவுரையாற்றினாா். கண்டன உைரையை மண்டலச் செயலாளா் இரா.விடுதலை சந்திரன் ஆற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் நகரத் தலைவா் வெ.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளா் நீ.சேகா், மாவட்ட அமைப்பாளா் கோபி இமயவரம்பன், பொதுக்குழு உறுப்பினா் க.அமிா்தம், மாவட்ட தொழிலாளரணி கூத்தன், செயராமன், காா்முகிலன், சத்தியமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முடிவில் மாணவா் கழக செயலாளா் அகஸ்டின் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.