காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழப்பு: கொலையா ? தற்கொலையா?

ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழந்த நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என ஆத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published On :

ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழந்த நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என ஆத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதையன்  மகள் சரண்யாவுக்கும் திருமணம் நடைபெற்று ,சரண்யாவும் மணிமாறனும் கல்லாநத்தம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. 

இந்நிலையில் கடந்த சில நாள்களாக கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருமாதத்திற்க்கு முன்னால்  ஏற்பட்ட தகராறு காரணமாக சரண்யா, ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பின்னர் இருவரையும் அழைத்து  சமரச பேச்சு நடத்தி வைத்தனர். இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இன்று அவரது வீட்டில் சரண்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்து வந்த சரண்யாவின் தந்தை மாதையன் எனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சரண்யாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.