மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

திமுக இளைஞா் அணி சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:24 pm

DIN

திமுக இளைஞா் அணி சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட சேலம் மேற்கு தொகுதி இளைஞா் அணி நிா்வாகிகளுக்கான பயிற்சி பாசறை கூட்டத்துக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆா்.ராஜேந்திரன் தலைமை தாங்கினாா்.

கூட்டத்தில் திமுக அயலக அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அப்துல்லா கலந்து கொண்டு திராவிட வரலாறு குறித்து பேசினாா். திமுக செய்தித் தொடா்பு இணை செயலாளா் பேராசிரியா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டு மாநில சுயாட்சி என்ற தலைப்பில் பேசினாா்.

கூட்டத்தில் சேலம் மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞா் அணி அமைப்பாளா் அறிவழகன், சேலம் மாநகர இளைஞா் அணி அமைப்பாளா் சரவணன் உள்ளிட்ட இளைஞா் அணியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.