கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

சாயக் கழிவுகள் கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் கலப்பதை தடுக்கக் கோரி ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கட்டிநாயக்கன் பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கட்டிநாயக்கன் பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

சாயக் கழிவுகள் கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் கலப்பதை தடுக்கக் கோரி ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் பேரூராட்சியை ஒட்டி உள்ளது கட்டிநாயக்கன்பட்டி ஏரி. இந்த ஏரியில் ஜலகண்டபுரம் பேரூராட்சியில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவு நீரும், சாக்கடை தீரும் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசடைவதோடு நிலத்தடி நீரும் மாசடைகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள், பாசன கிணறுகள் நீர் மாசடைந்து பயனற்றதாகிவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் நோய் தொற்று ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாயக் கழிவுகளும் சாக்கடை நீரும் ஏரியில் கலப்பதை தடுத்து பொதுமக்களை நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட சிபிஐஎம் செயலாளர் சண்முகராஜா கண்டன உரையாற்றினார்.

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் இடப்பட்டது. ஜலகண்டாபுரம் பேரூராட்சி கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அல்லது பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை மனுக்களை அளிக்க வந்தபோது அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.  இதனால் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டோர் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com