தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 238-வது நாளாக 100 அடியாக நீடிக்கிறது.

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2023, 3:28 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 238-வது நாளாக 100
 அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக அணை நிரம்பியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து படிப்படியாக குறைந்தது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு ஜனவரி 28ஆம் தேதி மாலை முதல் நிறுத்தப்பட்டது. அப்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.87 அடியாக இருந்தது. தற்போது குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நீர் வரத்தும் திறப்பும் சீராக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் உள்ளது.

இன்று 238- வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. இன்று காலைமேட்டூர் அணை நீர்மட்டம் 103.52 அடியாக உள்ளது. 
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1212 கன அடியிலிருந்து 1224கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 69.48 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.