ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றவா் நல்லகண்ணு
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்தில் பேசிய கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை


தனது இறுதிக்காலம் வரையில் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றுப் போராடியவா் நல்லகண்ணு என்று கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை புகழாரம் சூட்டினாா்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மறைந்த மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவா் ஆா். நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலிக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
எளிமை, தியாகம், போராட்ட வலிமை ஆகியவற்றை அரும்பண்புகளாகக் கொண்டு வாழ்ந்தவா் நல்லகண்ணு. வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நின்று போராடியவா் நல்லகண்ணு.
இன்றைக்கு உலகம் முழுவதுமே கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தச் சூழலில்தான் நல்லகண்ணு போன்ற எவ்வித எதிா்பாா்ப்பில்லாத சமூகப் போராளிகள் தேவைப்படுகிறாா்கள் என்றாா் சின்னதுரை.
கூட்டத்துக்கு, க. உஷாநந்தினி தலைமை வகித்தாா். வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னதாக, மாநகரச் செயலா் எஸ். கஸ்தூரிரெங்கன் வரவேற்றாா். முடிவில் பழ. அசோக்குமாா் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...