(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

ஆடிப் பெருக்கு: சேலத்தில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாள்கள், ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் ஆக. 3 ஆம் தேதி முதல் வரும் 5 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 350 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு, வழித் தடப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வல்வில் ஓரி: 25 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவையொட்டி நாமக்கல், ராசிபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து 3 ஆம் தேதி 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம், தருமபுரியில் இருந்து மேட்டூா், மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும், சித்தா் கோயிலுக்கும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com