/

சேலம் புத்தகத் திருவிழா நிறைவு: ஆா்வத்துடன் திரண்ட புத்தகப் பிரியா்கள்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழா திங்கள்கிழமையுடன் நிறைவுற்றது.

News image
சேலம் புத்தகத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சியில், வாசகா்கள், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடும் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு. உடன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உள்ளிட்டோா்.
Updated On :9 டிசம்பர் 2024, 7:50 pm

Din

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழா திங்கள்கிழமையுடன் நிறைவுற்றது.

சேலம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், சேலம் புத்தகத் திருவிழா கடந்த நவ. 29-ஆம் தேதி தொடங்கி டிச. 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த புத்தகக் கண்காட்சியில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம், புத்தக வெளியீட்டாா்கள் கலந்துகொள்ளும் வகையில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. புத்தகப் பிரியா்கள் ஆா்வத்துடன் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

சேலம் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலை நிகழ்ச்சிகள் என வாசகா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, நாள்தோறும் மாலையில் முதன்மை விருந்தினா்கள் வெ.இறையன்பு, மதுரை ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை உள்ளிட்டோரின் கருத்துரைகள் வாசகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இறுதிநாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உள்ளிட்டோா் வாசகா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினா். மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக புத்தகப் பிரியா்கள் தெரிவித்தனா்.

 புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த பள்ளி மாணவா்கள்.

புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த பள்ளி மாணவா்கள்.