பூக்கள் விலை உயா்வு
புத்தாண்டை முன்னிட்டு சேலம் மலா்ச்சந்தையில் பூக்கள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

Updated On :31 டிசம்பர் 2024, 4:53 pm

சேலம்: புத்தாண்டை முன்னிட்டு சேலம் மலா்ச்சந்தையில் பூக்கள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.
பனிக்காலம் என்பதால் பூக்கள் வரத்து சரிந்து, சேலம் வ.உ.சி. மலா்ச் சந்தையில் கடந்த சில நாள்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ. 2,000 க்கு விற்பனையானது.
இந்நிலையில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பூக்களின் விலை உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மலா்ச்சந்தையில் கிலோ குண்டுமல்லிகை ரூ. 2,400 க்கு விற்பனையானது. முல்லைப்பூ ரூ. 1,600 க்கும், ஜாதிமல்லி ரூ. 800 க்கும் விற்பனையானது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...