கன்னியாகுமரி
தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயா்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மாா்கழி கடைசி வெள்ளிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 5000 க்கும், பிச்சிப்பூ ரூ. 1300 க்கும் விற்பனையானது. மேலும், சுபமுகூா்த்த தினங்கள் மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வணிகா்கள் தெரிவித்தனா்.
அரளிப் பூ ரூ.180, வாடாமல்லி ரூ.150, கேந்தி ரூ.50, சம்பங்கி ரூ. 80, முல்லை ரூ. 1500, ரோஜா ரூ. 130, ஸ்டம்ப் ரோஜா ரூ. 250, துளசி ரூ. 60, தாமரை ரூ. 7, மரிகொழுந்து ரூ. 150, செவ்வந்தி ரூ.170 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
