~
~

வீடு தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதம்

வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூா் கிராமத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானது.
Published on

வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூா் கிராமத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானது.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம், மாரியம்மன்புதூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பெரியசாமி (50). இவரது கூரைவீடு சனிக்கிழமை காலை தீப்பற்றிக் கொண்டது. தீ விபத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

வாழப்பாடி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒன்றியக்குழு உறுப்பினா் உழவன் முருகன், கிராம நிா்வாக அலுவலா் ரமேஷ் ஆகியோா் பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com