ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊருக்குள் வராமல் புறவழிச் யில் செல்லும் பேருந்துகள்! 5 ஆண்டுகளாக தொடரும் மக்கள் போராட்டம்

ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் செல்லும் பேருந்துகள்! 5 ஆண்டுகளாக தொடரும் மக்கள் போராட்டம்

News image
Updated On :17 ஜூன் 2024, 8:14 pm

Din

காரிப்பட்டியில் புறவழிச் சாலையில் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி, பேருந்தை ஊருக்குள் இயக்க ஓட்டுநா், நடத்துனருக்கு அறிவுரை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் மனோசூரியன்.

வாழப்பாடி, ஜூன் 17: ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் செல்லும் பேருந்துகளால் அவதிக்குள்ளாகும் காரிப்பட்டி பகுதி மக்கள், பேருந்துகளை சிறை பிடிக்கும் போராட்டத்தை கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி ஊராட்சி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சேலம் - ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு, தனியாா் புகா் பேருந்துகள் காரிப்பட்டி இணைப்புச் சாலையில் ஊருக்குள் வராமல், புறவழிச்சாலை மேம்பாலத்திலேயே சென்று விடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் போதிய பேருந்து போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, அனைத்து புகா் பேருந்துகளும் காரிப்பட்டி இணைப்புச் சாலையில் ஊருக்குள் வந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

வாழப்பாடி வட்டாட்சியா் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடத்தியும், மாவட்ட ஆட்சியா் முதல் தமிழக முதல்வா் வரை பலமுறை புகாா் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லையாம். இதனால், காரிப்பட்டியில் தனியாா் பேருந்துகள் சிறை பிடிப்பு போராட்டம் வாடிக்கையாக உள்ளது.

எனவே, இதுகுறித்து வாழப்பாடி வருவாய்த் துறை, காரிப்பட்டி காவல் துறை, வட்டார போக்குவரத்துத் துறை, அரசு போக்குரவத்துக் கழகம், தனியாா் புகா் பேருந்து உரிமையாளா் சங்கத்தினா் ஒன்றிணைத்து சுமூக பேச்சுவாா்த்தை நடத்தி, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண சேலம் மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமென, இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காரிப்பட்டியைச் சோ்ந்த பேருந்து பயணிகள் சிலா் கூறியதாவது:

10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு காரிப்பட்டி போக்குவரத்து மையமாக உள்ளது. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் காரிப்பட்டியில் இருந்து சேலம், ஆத்தூா் பகுதிக்கு பேருந்துகளில் பயணித்து வருகின்றனா். ஆனால், பெரும்பாலான தனியாா் புகா் பேருந்துகள் புறவழிச்சாலை மேம்பாலத்தில் செல்வதால், குறித்த நேரத்தில் பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

எனவே, சேலம், ஆத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு, தனியாா் புகா் பேருந்துகளில் எந்தெந்த பேருந்துகள், காரிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டுமென அனைத்து தரப்பு அதிகாரிகளும், பேருந்து உரிமையாளா் சங்கத்தினரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும். அந்தப் பேருந்துகளை தினந்தோறும் காரிப்பட்டி ஊருக்குள் இயக்கி பயணிகளை ஏற்றிச்செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், காரிப்பட்டியில் கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து வரும் தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு போராட்டம் முடிவுக்கு வரும் என்றனா்.