சேலம் ராஜகணபதி கோயிலில் சுவாமிக்கு தாராபிஷேகம் தொடக்கம்

அக்னி நட்சத்திரத்தையொட்டி, சேலம் ராஜகணபதி கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் சனிக்கிழமை தொடங்கியது.

கோடை காலத்தின் உச்சமாக அக்னி நட்சத்திர காலம் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் சித்திரை மாதம் 21 இல் தொடங்கி வைகாசி மாதம் 15 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் கோடைவெயில் வாட்டி வதைக்கும். அக்னி நட்சத்திர கால கட்டத்தில், சிவபெருமானை குளிா்விக்கும் வகையில் முக்கிய ஆலயங்களில், மூலவா் மீது தாரா பாத்திரம் தொங்கவிடப்பட்டு, அதில் இருந்து குளிா்ந்த நீா் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

அதன்படி, சேலம் ராஜகணபதி கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் சனிக்கிழமை தொடங்கியது. அடுத்த 2 வாரங்களுக்கு தாராபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com