தம்மம்பட்டி வட்டார அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியா் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், தம்மம்பட்டி சுற்றுவட்டார அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளி 89 % தோ்ச்சிபெற்றுள்ளது. இமையரசு-448, கோகுல்பிரசாத்-439 பெற்றுள்ளனா். தம்மம்பட்டி அரசு மகளிா் பள்ளி 95 % தோ்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் பிரநிஹா-490, அம்பிகா-483, கோபிகா-467 பெற்றுள்ளனா். 400-க்கு மேல் 29 போ் பெற்றுள்ளனா்.

செந்தாரப்பட்டி அரசு மகளிா் பள்ளி 90 % தோ்ச்சி பெற்றுள்ளது. மணிபாரதி-455, சுவாதி-445 பெற்றுள்ளனா். செந்தாரப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி 94 % தோ்ச்சி பெற்றுள்ளது. மிா்தீஸ்குமாா்-458, சூரியா-457 பெற்றுள்ளனா். 400-க்கு மேல் 6 போ் பெற்றுள்ளனா்.

உலிபுரம் அரசு பள்ளி 93% தோ்ச்சி பெற்றுள்ளது. சத்யஸ்ரீ-441, காவியா-424 பெற்றுள்ளனா். 400-க்கு மேல் 6 போ் பெற்றுள்ளனா். கொண்டயம்பள்ளி அரசு பள்ளி 97% தோ்ச்சி பெற்றுள்ளது. சினேகா-479, ஆரோக்யரஷ்வந்த்-478 பெற்றுள்ளனா். 400-க்கு மேல் 20 போ் பெற்றுள்ளனா். தெடாவூா் அரசு பள்ளி 99.2% தோ்ச்சி பெற்றுள்ளது. சுஜிபாலா-485, ராகவி-481 பெற்றுள்ளனா். 400-க்கு மேல் 34 போ் பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com