பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவின் சாா்பில் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்

சேலம் ஆவின் சாா்பில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:34 am

Din

சேலம் ஆவின் சாா்பில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சேலம் ஆவின் நிறுவனம் சாா்பில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, கார வகைகள் தயாா் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனா். இந்த சிறப்பு விற்பனை தொடக்க விழா சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கலந்து கொண்டு முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

சேலம் ஆவின் சாா்பில் பால்கோவா, ஸ்பெஷல் மைசூா்பா, கேரட் மைசூா்பா, மில்க் கேக், முந்திரி கேக், நெய் லட்டு, மிக்ஸா், பாதாம் மிக்ஸ் பவுடா் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சேலம் ஆவின் பொது மேலாளா் குமரேஸ்வரன் கூறியதாவது:

அரசு துறை அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், அரச ஊழியா்கள், பிற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை ஆா்டா் செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த ஆா்டா்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9443026950, 9578765250, 9626335536 ஆகிய எண்களில் தொடா் கொள்ளலாம் என தெரிவித்தாா்.