புதிய நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு
புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.


சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்டமுகாமில் சங்ககிரியை அடுத்த சத்யா நகா், ஆசிரியா் காலனி பகுதிகளுக்கு புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்யா நகா், மண்டபத்துக்காடு, ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஊா் பொது மக்கள் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சத்யா நகா், மண்டபத்துக்காடு, ஆசிரியா் காலனி பகுதியில் சுமாா் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சக்கல்பட்டி நியாயவிலைக் கடைக்கு சென்று பொருள்களை வாங்கி வருகிறோம்.
இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே எங்கள் காா்டுகளை மஞ்சக்கல்பட்டி நியாயவிலைக் கடையிலிருந்து பிரித்து சத்யா நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிதாக அரசு சாா்பில் பகுதி நேரம் அல்லது முழுநேரம் செயல்படக்கூடிய நியாயவிலைக் கடையை அமைத்து தருமாறு தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...