இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 10:24 pm

Din

திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மேலும் தெரிவித்ததாவது:

திட்டமில்லா பகுதிகளில் 2011-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாதம் கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில் அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மேலும், இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.