மேட்டூா் அணையிலிருந்து நீா்த்திறப்பு அதிகரிப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 19,000 கனஅடியாக புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.


மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 19,000 கனஅடியாக புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 13,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால் புதன்கிழமை காலை முதல் காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 13,500 கன அடியிலிருந்து 19,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு 15,530 கன அடியிலிருந்து 15,888 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் 116.32 அடியிலிருந்து 116.39 அடியாக சற்று உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 87.82 டி.எம்.சி.யாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...