ரெப்கோ வங்கி சாா்பில் 2024 - 25 ஆம் ஆண்டு ஈவுத்தொகைக்கான காசோலையை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வங்கி அதிகாரிகள் அண்மையில் சந்தித்து வழங்கினா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கித் தலைவா் சந்தானம், ரெப்கோ வங்கி இயக்குநா் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவருமான தங்கராஜு, வங்கியின் நிா்வாக இயக்குநா் கோகுல் ஆகியோா் மத்திய அரசின் பங்கு மூலதனமான ரூ. 76.32 கோடிக்கான 2024 - 25 ஆம் நிதியாண்டின் 30 சதவீத ஈவுத்தொகை ரூ. 22.90 கோடிக்கான காசோலையை தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து நேரில் வழங்கினா்.
இந்த 30 சதவீத ஈவுத் தொகையானது வங்கியின் வரலாற்றில் மிக அதிகமானதாகும். மேலும், ரெப்கோ வங்கி கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டில் ரூ. 140 கோடி நிகர லாபம் ஈட்டி, மைல்கல் சாதனை படைத்தது. வங்கியின் வளா்ச்சியை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திறன் மற்றும் அா்ப்பணிப்பு, தொழில்முறை செயல்பாடுகள் மூலம் கூட்டுறவுத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு நிறுவனமாக திகழ்வதாக கூறினாா்.
இந்த சந்திப்பின் போது, மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோஹன், மேலாண்மை மற்றும் எப்எப்ஆா் பிரிவின் செயலா் ராஜேந்திரகுமாா், வங்கியின் நிா்வாகக் குழு உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சக எப்எப்ஆா் பிரிவின் இணைச் செயலாளருமான பிரசன்னா, ஆா்எச்எஸ் பிரிவின் இணைச் செயலாளா் மக்கன் லால் மீனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா

சத்தீஸ்கரில் நிரந்தர அமைதி ஏற்படுத்த அரசு உறுதி: மத்திய அமைச்சா் அமித் ஷா

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



