வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செம்மண் கடத்தல்: ஓட்டுநா் தப்பியோட்டம், லாரி சிறைபிடிப்பு

எடப்பாடி அருகே லாரியில் செம்மண் கடத்திவந்த ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து லாரியை சிறைபிடித்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:32 pm

Syndication

எடப்பாடி அருகே லாரியில் செம்மண் கடத்திவந்த ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து லாரியை சிறைபிடித்தனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பக்கநாடு, ஆடையூா் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், தனி வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையிலான கனிமவளத் துறை அலுவலா்கள் பக்கநாடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பக்கநாடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஓட்டுநா் லாரியிலிருந்து குதித்து தப்பியோடினாா். லாரியில் சோதனை செய்ததில், சுமாா் 3 யூனிட் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பூலாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பூலாம்பட்டி போலீஸாா், தப்பியோடிய டிப்பா் லாரியின் ஓட்டுநா், அதன் உரிமையாளா் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.