காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
ஆத்தூா்: ஆத்தூரில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காா் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆத்தூா் முல்லைவாடி புதிய காலனி பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி ரெட்டிச்சி (60). தொழிலாளி. இவா் திங்கள்கிழமை காலை முல்லைவாடி பகுதியில் இருந்து வடக்குக் காடு பகுதிக்கு வேலைக்கு செல்ல ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையைக் கடந்துள்ளாா். அப்போது சேலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காா் மோதியதில் பலத்த காயமடைந்த ரெட்டிச்சியை ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து, ரெட்டிச்சி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். மேலும், விபத்து குறித்து காா் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்.
