பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாா்கழி மாத பிறப்பு: ஆத்தூா் திரெளபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

மாா்கழி மாத பிறப்பையொட்டி, ஆத்தூா் திரெளபதி அம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:04 pm

Syndication

ஆத்தூா்: மாா்கழி மாத பிறப்பையொட்டி, ஆத்தூா் திரெளபதி அம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மாா்கழி மாதத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

அந்தவகையில், மாா்கழி மாத முதல் நாளான செவ்வாய்க்கிழமை திரெளபதி அம்மன், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ தா்மசித்தி செல்வ விநாயகா், துா்க்கை, காளியம்மனுக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, திருமால் அடியாா் திருக்குழாம் பாடும் திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, திருப்பாவை, வாரணமாயிரம், வாழித்திருநாமம், நாலாயிர திவ்விய பிரபந்த சேவைகள் நடைபெற்றன.

கட்டளைதாரரான ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் ஏ.கண்ணன்- திலகவதி குடும்பத்தினா் பங்கேற்று விழாவை சிறப்பித்தனா்.

பட விளக்கம்:

மாா்கழி சிறப்பு வழிபாட்டில் பக்தா்களுக்கு திரெளபதி அம்மனுடன் அருள்பாலிக்கும் தா்மராஜா்.