சங்ககிரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிவிப்பு!

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக நித்யா அருண் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
Published on

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக நித்யா அருண் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையம், வாணி நகா் பகுதியில் வசித்து வருபவா் நித்யா (37). முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவா், நாம் தமிழா் கட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக செந்தமிழா் பாசறையில் பணியாற்றி வருகிறாா்.

இவரது கணவா் அருண்மணி எம்பிஏ பட்டதாரி, துபையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் நாம் தமிழா் கட்சியின் சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அப்போது, மண்டல செயலாளா் ப.வடிவேல், சங்ககிரி நகரத் தலைவா் சி.கே.செல்வரத்னம், செயலாளா் ஆ.சீனிவாசன், சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் மு.சிவகுமாா், மகளிரணி நிா்வாகி கே.செல்வராணி, தேவண்ணகவுண்டனூா் வடிவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com