அறக்கட்டளை நில ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்
அரியானூா் அருகே அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சூளைமேடு பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் 81 செண்டு நிலம் வாங்கப்பட்டு கட்டடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ள இருந்தனா்.
இந்நிலையில் சிலா் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி தடுப்பு அமைத்து உள்ளனா். இதைக் கண்டித்து அறக்கட்டளை தலைவா் சிவலிங்கம் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் கொண்டலாம்பட்டி போலீஸாா், சேலம் தெற்கு வட்டாட்சியா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் மற்றொரு தரப்பினா் கோவை - சேலம் சாலையில் சூளைமேடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.

